தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"சட்ட மேலாண்மை, திவால்நிலை மற்றும் நொடித்துப்போதல் குறியீடு, 2016" குறித்த ஐந்து நாள் பயிற்சித் திட்டத்தை பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமி துவக்கி வைத்தது

प्रविष्टि तिथि: 20 JAN 2026 2:44PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரிகளுக்கான ‘சட்ட மேலாண்மை, திவால்நிலை மற்றும் நொடித்துப்போதல் குறியீடு (ஐபிசி) , 2016’ குறித்த ஐந்து நாள் பயிற்சித் திட்டத்தை நேற்று தொடங்கியது. ஐபிசி கட்டமைப்பின் கீழ் எழும் திவால்நிலை தொடர்பான விஷயங்கள் மற்றும் சட்ட சிக்கல்களைக் கையாள்வதில் இபிஎஃப்ஓ அதிகாரிகளின் சட்டம் மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி 2026, ஜனவரி 19 முதல் 23 வரை நடத்தப்படுகிறது.

பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமியின்  இயக்குநர் திரு குமார் ரோஹித், திவால்நிலை மற்றும் நொடித்துப்போதல் சட்டம், 2016, இந்தியாவின் சட்டம் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று கூறினார். இபிஎஃப்ஓ போன்ற சட்டப்பூர்வ அதிகாரிகள், தற்காலிக நிறுத்த விதிகள், வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகைகளின் முன்னுரிமை மற்றும் செயல்பாடு, மதிப்பீடு மற்றும் மீட்பு சிக்கல்கள், ஐபிசி நிர்வாகத்தின் கீழ் அதிகாரிகளைத்  தீர்மானிக்கும் முன் பிரதிநிதித்துவம் தொடர்பாக சிக்கலான சட்ட சவால்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார் .

இந்திய திவால்நிலை மற்றும் நொடித்துப்போதல் வாரியத்தின் பொது மேலாளர் திரு ராஜேஷ் திவாரி, பங்கேற்பாளர்களிடையே உரையாற்றும் போது, திவால்நிலை மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தின் நோக்கங்கள், நிறுவனக் கட்டமைப்பு மற்றும் முக்கியப் பங்குதாரர்களின் பங்களிப்பை கோடிட்டுக் காட்டினார். திவால்நிலைச் சட்டத்தின் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த கருத்துகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் பயனுள்ள தீர்வுகளை எட்டுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரிகளால் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216406&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2216626) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी