ரெயில்வே அமைச்சகம்
‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் நாட்டில் 1.32 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது
प्रविष्टि तिथि:
20 JAN 2026 4:43PM by PIB Chennai
உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான வலிமைமிக்க தளமாக இந்திய ரயில்வேயின் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டம் உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அடிப்படைத் தொழில்முனைவோரை இது ஊக்குவிக்கிறது. இந்த முன்முயற்சியின் மூலம் இந்தியாவின் செழுமைமிக்க பிராந்திய பன்முகத் தன்மையின் வளமையை எடுத்துக்காட்டக் கூடியதாக ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தேசிய ரயில்வே கட்டமைப்புடன் உள்ளூர் பாரம்பரியத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது.
2026 ஜனவரி 19 வரை நாட்டில் 2002 ரயில் நிலையங்களில் மொத்தம் 2,326 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இது ஆயிரக்கணக்கான உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறு தயாரிப்பாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் நாள்தோறும் 1.32 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நேரடி பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216453®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2216544)
आगंतुक पटल : 10