உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
போட்டித்தன்மை வாய்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய, உலக அளவில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் துறைக்கான உத்திசார் வரைபடத்தை, உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்தின் சிந்தனை முகாம் வகுக்கிறது.
प्रविष्टि तिथि:
20 JAN 2026 2:18PM by PIB Chennai
மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், ராஜஸ்தானின் உதய்பூரில், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் தலைமையில் இரண்டு நாள் சிந்தனை முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் 22 மத்திய அமைச்சகங்கள், 27 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 30-க்கும் அதிகமான தொழில்துறை பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்கள், தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள், இன்வெஸ்ட் இந்தியா ஆகியவற்றின் மூத்தப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொள்கை சீர்திருத்தங்கள், புத்தாக்கம், மதிப்புத் தொடர் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை மூலம், இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்கான முழு அரசு மற்றும் முழு தொழில்துறை அணுகுமுறையை இது பிரதிபலித்தது.
சிந்தனை முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கும், மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை வலுப்படுத்தும், பெருமளவில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும், நவீன, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உணவு பதப்படுத்தும் துறையை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
சிந்தனை முகாமின் ஒரு பகுதியாக, உதய்பூரில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பொதுவான தொழில் முயற்சி வசதியையும் மத்திய அமைச்சர் திறந்து வைத்தார். இது கஸ்டர்ட் ஆப்பிள், ஜாமூன், நெல்லிக்காய், கற்றாழை போன்ற சிறுவகையிலான வனப் பொருட்களை மசாலாப் பொருட்களுடன் பதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மதிப்புக் கூட்டலை வலுப்படுத்தும், உள்ளூர் தொழில்முனைவோரை ஆதரிக்கும், பிராந்திய வேளாண் மற்றும் வன விளைபொருட்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிந்தனை முகாமை நிறைவு செய்து பேசிய அமைச்சர், நடைமுறைசார்ந்த, எதிர்காலம் சார்ந்த மற்றும் செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகளை எட்டுவதற்காக அனைத்துப் பங்கேற்பாளர்களின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார். முக்கியமான இடைவெளிகளை சரி செய்வதற்கும் துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் பங்குதாரர்களுடன் கைகோர்த்து தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் அமைச்சகத்தின் விருப்பத்தை அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216396®=3&lang=1
***
AD/SMB/SH
(रिलीज़ आईडी: 2216538)
आगंतुक पटल : 9