வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் இருந்து வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க இயற்கை வேளாண்மை மாநாடு மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடத்தியது

प्रविष्टि तिथि: 20 JAN 2026 12:53PM by PIB Chennai

மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், அசாம் அரசுடன் இணைந்து இயற்கை வேளாண்மை மாநாடு மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்பை குவஹாத்தியில் நடத்தியது. இந்த நிகழ்வு வேளாண்-ஏற்றுமதி இணைப்புகளை வலுப்படுத்துவதையும் அசாமின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

இந்த மாநாட்டில் அசாமில் இருந்து 30-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள், 9 இறக்குமதியாளர்களுடன் சுமார் 50 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களும் பங்கேற்றன. வாங்குவோர் விற்போர் சந்திப்பு வணிகத் தொடர்புகளுக்குக் கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்கியது. இது பங்கேற்பாளர்களின் வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச வாங்குபவர்களுடன் நீண்டகாலக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும் உதவியது.

அசாம், தனது வளமான வேளாண்மை-பருவநிலை பன்முகத்தன்மையுடன், ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அசாம் ஜோஹா அரிசி மற்றும் பாசுமதி அல்லாத பல்வேறு சிறப்பு அரிசி வகைகளுக்கும்  கூடுதலாக, வாழைப்பழம், அன்னாசி, மாண்டரின் ஆரஞ்சு, அசாம் எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள், கருப்பு மிளகு போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளும், பல்வேறு தோட்டக்கலை மற்றும் பிற இயற்கை வேளாண் பொருட்களும், உலகளாவிய வேளாண் சந்தைகளில் மாநிலத்தின் இருப்பை விரிவுபடுத்த வலுவான வாய்ப்புகளை வழங்குகின்றன.

அசாம் மாநில வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கலால் துறை அமைச்சர் திரு அதுல் போரா, வேளாண்மை  மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் திரு அபிஷேக் தேவ், அசாம் மாநில வேளாண் உற்பத்தி ஆணையர் திரு அருணா ரஜோரியா, அசாம் வேளாண்துறை இயக்குநர் திரு உதய் பிரவீன் ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216372&reg=3&lang=1

***

AD/SMB/KR


(रिलीज़ आईडी: 2216485) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi