கூட்டுறவு அமைச்சகம்
ரயில்வே ஊழியர்களின் பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
19 JAN 2026 4:15PM by PIB Chennai
ரயில்வே ஊழியர்களின் பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்கு கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் 2026 ஜனவரி 19 அன்று ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) சட்டம் 2023-ன் விதிகளுடன் அவர்களுடைய நிர்வாகச் சட்டங்களை சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொடர்புடைய சங்கங்களின் தலைவர்கள் தலைமைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அலுவலக பொறுப்பாளர்களின் பங்கேற்புடன் ரயில்வே ஊழியர்களின் 16 பல்வேறு மாநில கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய கூட்டுறவுத் தேர்தல் ஆணையத் தலைவர் திரு தேவேந்திர குமார் சிங், கூட்டுறவுத் தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் 220 தேர்தல்களை கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளதாகவும் தற்போது 70 தேர்தல்கள் நடைபெற்று வருவதாகவும் திரு சிங் கூறினார்.
ரயில்வே ஊழியர்களின் பல்வேறு மாநிலங்களின் 18 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரயில்வே ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கங்கள் வைப்புத் தொகையை ஏற்று தங்களுடைய உறுப்பினர்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. இந்த சங்கங்கள் மூலம் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு வைப்புத் தொகையும் கடன் தொகையும் கையாளப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 சங்கங்களுக்கு வங்கி உரிமங்களும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216131®=3&lang=1
***
TV/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2216224)
आगंतुक पटल : 10