PIB Headquarters
தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகள்
प्रविष्टि तिथि:
19 JAN 2026 10:50AM by PIB Chennai
எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாலைகள் பாலங்கள் சுரங்கங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை எல்லைப்புற சாலை அமைப்பு நிறுவனம் அமைத்து வருகிறது.
1960-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நாடு முழுவதும் இதுவரை 64,100 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகள், 1,179 பாலங்களும், 7 சுரங்கங்கள் மற்றும் 22 விமான தளங்களையும் அமைத்துள்ளது.
பூடான், மியான்மர், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது அந்த நாடுகளுடனான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் உத்திசார்ந்த ஒத்துழைப்புக்கும் வகை செய்கிறது.
கடந்த 2024 – 25-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 16,690 கோடி ரூபாய் செலவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
2025 – 26-ம் நிதியாண்டில் 17,900 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. 2023 - 24, 2024 – 25 ஆகிய ஆண்டுகளில் எல்லைப்புற சாலை கட்டுமான நிறுவனம் 250 உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்துக்கது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215957®=3&lang=1
TV/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2216049)
आगंतुक पटल : 7