பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தின முகாமில் உள்ள தேசிய மாணவர் படையினருடன் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 3:34PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், இன்று (ஜனவரி 18, 2026) தில்லி கண்டோன்மெண்ட்டில் உள்ள தேசிய மாணவர் படையின் (என்சிசி) குடியரசு தின முகாமுக்குச் சென்றார். அங்கு இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியை அவர் ரசித்தார். அதிகாரிகளிடையேயும், மாணவர் படையினர் இடையேயும், உரையாற்றிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர், தேசிய மாணவர் படையினர், ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தலைமைத்துவ திறன் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக கூறினார். 

தேசிய ஒருமைப்பாட்டையும் பிர்சா முண்டாவின் மதிப்புகளையும் பரப்புவதற்காக ராஞ்சியில் இருந்து தில்லி சைக்கிள் பயணம் மேற்கொண்ட தேசிய மாணவர் படையினர் 15 பேரை திரு சஞ்சய் சேத் பாராட்டினார். 2025-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 10 தேசிய மாணவர் படையினரையும் அவர் பாராட்டினார்.

கடமை, தேசபக்தி, அரசியலமைப்பு விழுமியங்களில் உறுதியாகவும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டியெழுப்பும் உறுதியுடனும்  செயல்பட வேண்டும் என்று திரு சஞ்சய் கேட்டுக்கொண்டார்.    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215816&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215870) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी