PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உள்நாட்டு சிப் வடிவமைப்புச் சூழல் அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 9:53AM by PIB Chennai

பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப திறன், தேசிய மீட்சித்தன்மை ஆகியவற்றின் தூணாக இந்தியா தனது குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) சூழல் அமைப்பை வலுப்படுத்தி வருகிறது. மேம்பட்ட மின்னணுவியல் பயன்பாடுகளுக்கான உலகளாவிய தேவை சீராக அதிகரித்து வருவதால், குறைக்கடத்தி தொழில் 2030-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உலகளாவிய சூழலில் இத்துறையில் திறன் பற்றாக்குறை உள்ளது. 2032-ம் ஆண்டுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் திறமையான நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இது, இலக்கு சார்ந்த முயற்சிகள் மூலம் உலகளாவிய குறைக்கடத்தி சூழல் அமைப்பில் இந்தியாவை ஒரு முக்கிய பங்களிப்பாளராக நிலைநிறுத்துகிறது.

சிப் வடிவமைப்பை ஒரு தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து, மின்னணுவியல் அமைச்சகம், இந்தியாவின் குறைக்கடத்தி வடிவமைப்பு சூழலை சிறப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. சிப்ஸ் டூ ஸ்டார்ட்-அப் (C2S) என்ற திட்டத்தின் கீழ் 305 கல்வி நிறுவனங்களும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (DLI) திட்டத்தின் கீழ் 95 புத்தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் சிப் வடிவமைப்பு பயிற்சியில் சேர்ந்துள்ளனர். இதுவரை சுமார் 67,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

சி டூ எஸ் திட்டம் ஒரு விரிவான அணுகுமுறையை பின்பற்றுகிறது. மாணவர்களுக்கு சிப் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை ஆகியவற்றில் நேரடி அனுபவத்தை இது வழங்குகிறது . இதில் தொழில் ஒத்துழைப்பு நிறுவனங்களுடன் இணைந்து வழக்கமான பயிற்சி அமர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் மேம்பட்ட சிப் வடிவமைப்பு கருவிகள், உற்பத்தி வசதிகள், சோதனை வளங்களை பெறுகிறார்கள். 

சிப்ஸ் டு ஸ்டார்ட்-அப் (சி டூ எஸ்) திட்டத்தின் கீழ் இந்தியாவின் சிப் வடிவமைப்பு சூழல் அமைப்பு வலுப்படுத்தப்படுகிறது. புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஒரு அடித்தளமாக குறைக்கடத்திகள் உருவாகியுள்ளன. குறைக்கடத்தி வடிவமைப்பிலும் திறன் மேம்பாட்டிலும் இந்தியாவின் செயல்பாடுகள் உலகளாவிய தொழில்நுட்ப போட்டித்தன்மைய அதிகரித்து வருகிறது. எதிர்கால குறைக்கடத்தி தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் இந்தியா உறுதியான பங்கை வகிக்க, நாடு தனது கல்விச் சூழல் அமைப்பை தயார்படுத்தி வருகிறது. இது குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்தும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215755&reg=3&lang=1

https://c2s.gov.in/

https://c2s.gov.in/Centralized_EDA_Tool_Access.jsp

https://c2s.gov.in/MPW_Services.jsp

https://c2s.gov.in/FPGA.jsp

https://c2s.gov.in/PARAM.jsp

https://c2s.gov.in/Post_Silicon.jsp

https://c2s.gov.in/Completed_Training.jsp

https://c2s.gov.in/SCL_MPW_Consolidated.jsp
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196422&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2202899&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2211220&reg=3&lang=2

https://ncvet.gov.in/wp-content/uploads/2025/07/semiconductor-strategy-report-2025.pdf

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215810) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati