PIB Headquarters
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறைக்கு அதிகாரமளித்தலும் விரிவாக்கமும்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 10:18AM by PIB Chennai

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம், "வசுதைவ குடும்பகம்" அதாவது உலகமே ஒரே குடும்பம் என்ற கருத்தாக்கத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. சமூகத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து இந்தியாவில் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கூட்டுறவுகளின் உலகளாவிய முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை முறையாக அங்கீகரித்து, 2025-ம் ஆண்டை "சர்வதேச கூட்டுறவு ஆண்டு" என்று அறிவித்தது.

இந்தியாவில் கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் கூட்டுறவுத் துறை சார்ந்த சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* நாட்டில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6.6 லட்சம் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

* 30 துறைகளில் 32 கோடி உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் சேவை செய்கின்றன.

* 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கூட்டுறவு சங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

* 79,630 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் 32,009 புதிய பல்நோக்கு பால் பண்ணை மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் 28 நாடுகளுக்கு 5,556 கோடி மதிப்புள்ள 13.77 லட்சம் மெட்ரிக் டன் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

* தேசிய இயற்கை வேளாண் கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

* உலகின் மிகப்பெரிய பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 112 தானிய சேமிப்புக் கிடங்குகளில் 68,702 மெட்ரிக் டன் சேமிப்புத் திறனை உருவாக்கும் கிடங்குகள் நிறைவடைந்துள்ளன.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் , கூட்டுறவு கடன் சங்கச் சட்டம் - 1904 இயற்றப்பட்டதன் மூலம் கூட்டுறவுகள் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றன. சுதந்திரத்துக்குப் பின், கூட்டுறவுகள் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியின் முக்கிய கருவியாக உருவெடுத்தன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜூலை 6 , 2021 அன்று அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இந்தத் துறைக்கு தேசிய கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவில் கூட்டுறவு நிறுவனங்கள் விவசாயம், கடன், வங்கி, வீட்டுவசதி மற்றும் பெண்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுகின்றன.

விரிவான சீர்திருத்தங்களின் மூலம், கூட்டுறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு பிரதிபலிக்கிறது. கூட்டுறவின் மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வையால் நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படுகின்றன.

டிஜிட்டல் மயமாக்கல், புதிய பல-மாநில கூட்டுறவுகள், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள், ஆதரவான நிதி கொள்கை நடவடிக்கைகள் ஆகியவை செயல்திறனையும் சந்தை ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தியுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சிகள் இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ந்து வரும் பங்கை நிரூபிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளை பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215759&reg=3&lang=1

https://www.cooperation.gov.in/  

https://cooperatives.gov.in/Final_National_Cooperative_Database_023.pdf

https://www.cooperation.gov.in/sites/default/files/inline-files/Compilation-of-Suggestions-received-so-far.pdf

https://www.ncdc.in/index.jsp?page=genesis-functions=hi

https://cooperatives.gov.in/en/home/faq

https://www.cooperation.gov.in/sites/default/files/2025-07/NCP%28Eng%29_23Jul2025_v5_Final.pdf

https://cooperatives.gov.in/en

https://www.cooperation.gov.in/en/about-primary-agriculture-cooperative-credit-societies-pacs

https://www.cooperation.gov.in/sites/default/files/2025-11/Initiatives%20%28புத்தகம்%29%20%20-%2020.11.2025%28updated%29.pdf

https://www.cooperation.gov.in/sites/default/files/2025-07/NCP%28Eng%29_23Jul2025_v5_Final.pdf

https://www.nafed-india.com/ வலைத்தளம்

https://www.nabard.org/EngDefault.aspx
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2201738&reg=6&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201628&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201659&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201632&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201663&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201754&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153182&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201752&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204693&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199602&reg=3&lang=1

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025926647401.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205137&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201637&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186643

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201749&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199832
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205068&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2201738&reg=6&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215805) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati