எரிசக்தி அமைச்சகம்
தொடர் இழப்புகளுக்குப் பிறகு மின்சார விநியோக நிறுவனங்கள் லாபத்தைப் பதிவு செய்துள்ளன - இது ஒரு புதிய அத்தியாயம் என மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் பாராட்டு
प्रविष्टि तिथि:
18 JAN 2026 10:34AM by PIB Chennai
டிஸ்காம் ((DISCOM) எனப்படும் நாட்டின் மின்சார விநியோக நிறுவனங்கள் 2024-25-ம் நிதியாண்டில் மொத்தமாக ₹2,701 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தை பதிவு செய்துள்ளன.இது இந்தத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். மாநில மின்சார வாரியங்களை பிரித்து நிறுவனமயமாக்கியதிலிருந்து, விநியோக நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக இழப்புகளைப் சந்தித்தன.
2013-14-ம் நிதியாண்டில் ₹67,962 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. பின்னர் அது குறைந்து வந்து இப்போது லாபம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால், இது விநியோகத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் என்றும், விநியோகத் துறையின் கவலைகளைத் தீர்க்க எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளின் விளைவாக இந்த லாபம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வையால் இந்த சாதனை சாத்தியமானது என்று அமைச்சர் கூறினார். மின்சாரத் துறையில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று திரு. மனோகர் லால் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம், மின்சார விதிகளில் திருத்தங்கள் போன்ற சீர்திருத்தங்களின் விளைவாக பல ஆண்டுகளுக்குப் பிறகு நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மொத்த தொழில்நுட்ப, வணிக இழப்புகள் குறைந்துள்ளன, இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. இது 2013-14-ம் நிதியாண்டில் 22.62%-லிருந்து 2024-25 நிதியாண்டில் 15.04% ஆகக் குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, நாடு முழுவதும் உள்ள விநியோக நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த மின்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215761®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215790)
आगंतुक पटल : 7