திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனேவில் பிரதமரின் சேது திட்டம் தொடர்பான பயிலரங்கம் நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 17 JAN 2026 12:02PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநில அரசுடன் இணைந்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்புனேவில் பிரதமரின் சேது எனப்படும் 'மேம்படுத்தப்பட்ட தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மூலம் மாற்றத்தை உருவாக்கும் பிரதமரின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தின்' (PM-SETU - Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs) ஒரு பகுதியாக ஒரு பெரிய தொழில்துறை ஆலோசனையை நடத்தவுள்ளது. இது  உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய திட்டமாகும். யஷ்வந்த்ராவ் சவான் மேம்பாட்டு நிர்வாக அகாடமியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆலோசனைதொழில்துறையினரின் பங்கேற்புதிட்டத்தின் செயல்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

கட்டுமானம்ஜவுளிவாகனம்மின்னணுவியல்எண்ணெய் மற்றும் எரிவாயுபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நிறுவனங்கள் இதில் பங்கேற்கும். மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு எம்.எஸ். தேபாஸ்ரீ முகர்ஜிமகாராஷ்டிரா அரசின் திறன் மேம்பாடுதொழில்முனைவோர் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி மனிஷா வர்மா ஆகியோர் இந்த ஆலோசனைக்கு தலைமை வகிப்பார்கள்.

பிரதமரின் சேது திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு தொழிற்பயிற்சி நிலையைங்கள் (ஐடிஐ) நவீனமயமாக்கப்படும். இதில் 200 ஐடிஐ-கள் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் 800 ஐடிஐ-கள் அவற்றின் பயிற்சி வரம்பை விரிவுபடுத்தும். இந்தத் திட்டம் ஐடிஐ-களை அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகஆனால் தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களாக நிலைநிறுத்தும். தேவை சார்ந்த பயிற்சிவலுவான வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் வகையில்  தொழில்துறையுடன் ஒத்துழைப்பின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆயத்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. உயர்தர தொழிற்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கும்எதிர்காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கும் இந்தியாவின் திறன் மேம்பாட்டுப் பயணத்தில் பிரதமரின் சேது திட்டம் ஒரு முக்கிய அம்சமாகத் திகழும்.

***

TV/PLM/SE


(रिलीज़ आईडी: 2215554) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi