மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மதிய விருந்தளித்து உபசரித்தார்

காமன்வெல்த் நாடுகள் புவியியல், கலாச்சார, வரலாற்று ரீதியில் வேறுபட்டிருந்தாலும், அவை பொதுவான நாடாளுமன்ற நெறிமுறைகளால் பிணைக்கப்பட்டுள்ளன: குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JAN 2026 5:32PM by PIB Chennai

காமன்வெல்த் நாடாளுமன்றங்களின் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்)தலைமை அதிகாரிகள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில்மாநிலங்களவைத் தலைவரும்குடியரசுத் துணைத் தலைவருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று  (16.01.2026) புதுதில்லியில் உள்ள சம்விதான் சதனில் அவர்களுக்கு மதிய உணவு விருந்து அளித்தார்.  2026 2026 ஜனவரி 14 முதல்  16 வரை இந்தியாவில்  நடைபெற்ற  காமன்வெல்த் அவைத் தலைவர்கள்தலைமை அதிகாரிகளின் 28-வது மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த மதிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

வருகை தந்த பிரமுகர்களை வரவேற்றுப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர்,  இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கட்டடமான சம்விதான் சதனில் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் சிறப்புமிக்க கூட்டம் நடத்தப்பட்டதில் மகிழ்ச்சி தெரிவித்தார் .

இந்த மாநாடு காமன்வெல்த் ஜனநாயகங்களை ஒருங்கிணைக்கும்  நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.  பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில்மரியாதையுடனும் கண்ணியத்துடனும் விவாதம்உரையாடல்கலந்துரையாடல் ஆகியவற்றை எளிதாக்குவது முதன்மையான பொறுப்பு என்று கூறினார். காமன்வெல்த் நாடுகள் புவியியல்கலாச்சாரம்வரலாற்று அனுபவங்கள் ஆகியவற்றில் வேறுபட்டாலும்அவை பொதுவான நாடாளுமன்ற நெறிமுறைகளாலும் ஜனநாயகக் கொள்கைகளாலும்கூட்டு அர்ப்பணிப்பாலும் பிணைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஜனநாயக மரபை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர்இந்தியாவை  ஜனநாயகத்தின் தாய் என்று கூறினார். இந்தியா காமன்வெல்த்தை ஒரு வரலாற்று அமைப்பாக மட்டுமல்லாமல்எதிர்கால வளர்ச்சிக்கான தளமாகவும் பார்க்கிறது என்று கூறினார். இந்த மாநாடு போன்ற நிகழ்வுகள் மூலம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில்மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாமத்திய அமைச்சர்கள்மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ்நாடாளுமன்றங்களுக்கு இடையேயான கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் துலியா ஆக்சன்காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் கலிலாமாநிலங்களவையின் செயலாளர்மக்களவைச் செயலாளர்கள்காமன்வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்கள்தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215363&reg=3&lang=1

***

TV/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2215464) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam