மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, குடியரசுத் துணைத்தலைவர், இங்கிலாந்து நாடாளுமன்ற மேலவைத் தலைவரைச் சந்தித்துப் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JAN 2026 3:17PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமன திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (16.01.2026) புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேலவையின் தலைவர் அல்குயித் மெக்ஃபால் உடன் ஒரு ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினார். 2026  ஜனவரி 14 முதல் 16 வரை இந்தியாவால் நடத்தப்படும் காமன்வெல்த் அவைத் தலைவர்கள், தலைமை அதிகாரிகளின் 28-வது மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த உரையாடல் நடந்தது.

அவரை மாநிலங்களவைக்கு வரவேற்ற குடியரசு துணைத் தலைவர், மாநாட்டில் அவர் பங்கேற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான, வலுவான நாடாளுமன்ற உறவுகளை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலிருந்து உத்வேகம் பெற்று, இந்தியாவின் தனித்துவமான ஜனநாயக கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் இயல்பாகவே உருவாகி வருவதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். பொதுவான ஜனநாயக விழுமியங்களை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற சிறப்புரிமை, நிர்வாகத்தின் பயனுள்ள ஜனநாயக மேற்பார்வை ஆகியவற்றில் இரு நாடாளுமன்றங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டினார். இந்திய சூழலில், பொறுப்புடன் கூடிய பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் உலக அளவில் நாடாளுமன்ற செயல்பாடுகளை மாற்றியமைத்துள்ளதாகவும், இந்தியா தனது நாடாளுமன்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக மின்னணு நாடாளுமன்ற அமைப்புகள், நேரடி ஒளிபரப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவுகளையும் ஒருங்கிணைத்துள்ளதாகவும் குடியரசார் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், ஜனநாயக தரங்களை நிலைநிறுத்தவும் காமன்வெல்த் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை இந்த சந்திப்பு மேலும் வலுப்படுத்தும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215279&reg=3&lang=1

***

TV/PLM/RK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2215395) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam