புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை கார்பன் உமிழ்வற்றதாக்குவதில் உயிரி எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கும் மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 3:08PM by PIB Chennai
இந்தியாவின் தூய எரிசக்திக்கான மாற்றத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் தொழில்துறையில், உயிரி எரிசக்தியின் முக்கிய பங்கு வகிக்கும் என புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் கூறியுள்ளார். ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்த, குறு சிறு நடுத்தர நிறுவனங்களில் உயிரி எரிபொருள் பயன்பாடு' என்ற தேசிய பயிலரங்கில் அமைச்சர் முக்கிய உரை நிகழ்த்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணம் கடந்த பத்து ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார். நாட்டின் பசுமை எரிசக்தி மாற்றத்தின் தூணாக உயிரி எரிசக்தி திகழ்கிறது என்றும் திரு நாயக் கூறினார்.
உயிரி எரிசக்தியானது, மின்துறையைத் தவிர பல தேசிய முன்னுரிமைகளுக்குப் பங்களிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தொழில்துறையில் கார்பன் நீக்கம் தொடர்பான சவாலை, குறிப்பாக குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையில் உள்ள சவாலை அவர் எடுத்துரைத்தார். குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவின உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவுக்குப் பங்களித்து, கோடிக் கணக்கானவர்களுக்கு வேலை அளிக்கின்றன என்றும் இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் உயிரி எரிபொருள் பயன்பாடுகள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி எடுத்துரைத்தார்.
நிகழ்வில் வெளியிடப்பட்ட அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்ட செயலாளர், ஜவுளி, உணவு பதப்படுத்துதல், உலோகங்கள், கைவினைக் கலை தொழில்கள் போன்ற துறைகளில் உயிரி எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தியை பரவலாக பயன்படுத்த முடியும் என்று கூறினார்.
இந்தப் பயிலரங்கில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஜெர்மன் தூதரக பிரதிநிதிகள், தொழில்துறையினர் தலைவர்கள், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215271®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215340)
आगंतुक पटल : 15