கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புது தில்லி உலக புத்தகக் கண்காட்சியில் அனுபவப் பகிர்வு, குழு விவாத நிகழ்ச்சிகளை சாகித்ய அகாடமி நடத்தியது

प्रविष्टि तिथि: 16 JAN 2026 1:13PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சி 2026-ன் போது, ஜனவரி 15, 2026 அன்று, சாகித்ய அகாடமி இந்தியாவின் அறிவுசார் மரபுகள் குறித்த நேரடி அனுபவ பகிர்வு நிகழ்ச்சியையும் குழு விவாதத்தையும் நடத்தியது.

நேருக்கு நேர் நிகழ்ச்சியில், பிரபல மலையாள எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான திரு கே.பி. ராமானுண்ணி பங்கேற்று தனது இலக்கிய வாழ்க்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நேருக்கு நேர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தியாவின் அறிவுசார் மரபுகள் குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ரவைல் சிங், பேராசிரியர் ஹரேகிருஷ்ண சதபதி, பேராசிரியர் பசவராஜ் கல்குடி ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டு நிகழ்ச்சிகளும் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அடங்கிய பார்வையாளர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றன. சாகித்ய அகாடமி சார்பாக டாக்டர் சந்தீப் கவுர் நன்றி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215227&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215269) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi