புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளியியல் துறையில் சுகாத்மே தேசிய விருதுக்கான பரிந்துரைகள், விண்ணப்பங்கள் வரவேற்பு

प्रविष्टि तिथि: 16 JAN 2026 10:10AM by PIB Chennai

புள்ளியியல் துறையில் உயர்தர ஆராய்ச்சிப் பணிகளின் அடிப்படையில் தனிநபர்கள் வழங்கிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கவும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவர அமைப்பை மேம்படுத்தவும், புள்ளியியல் துறையில் சுகாத்மே தேசிய விருது புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது 2000-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 45 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய புள்ளியியல் நிபுணர்களுக்கு அவர்களின் வாழ்நாள் பங்களிப்புகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது .

தேசிய விருதுகள் தளமன https://www.awards.gov.in தளம் மூலம், 2026-ம் ஆண்டுக்கான புள்ளியியல் துறைக்கான சுகாத்மே தேசிய விருதுக்கான பரிந்துரைகள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அல்லது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31, 2026 ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தகுதியுடைய பிற நபர்களைப் பரிந்துரைக்கலாம் அல்லது நிறுவனம் மூலமாகவும் பெயர்களை முன்மொழியலாம்.

இந்த விருது ஜூன் 29 , 2026 அன்று நடைபெறும் புள்ளியியல் தின விழாவில் வழங்கப்படும். இந்த விருதில் ஒரு பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு ஆகியவை அடங்கும். இந்த விழாவில், விருது பெறுபவர் தங்கள் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு அமர்வில் கலந்து கொண்டு அதை விளக்க வேண்டும்.

புள்ளியியல் துறையில் சுகாத்மே தேசிய விருது - 2026-க்கான பரிந்துரைகள், விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளமான www.mospi.gov.in -ல் வெளியாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215144&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215247) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam