அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தமிழ்நாட்டின் கொந்தகை ஏரியில் பெறப்பட்ட பருவநிலைப் பதிவுகள் பல்லுயிர் உத்திகளை செயல்படுத்த உதவும்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 4:26PM by PIB Chennai
தமிழ்நாட்டின் சிவகங்கை அருகே உள்ள கொந்தகை ஏரி (கண்மாய்), பகுதியில் மிக விரிவான பருவநிலை அம்சங்களில் ஒன்று ஒரு ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கொந்தகை ஏரி, கீழடிக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் தளமாகும். இது சங்க காலத்திலிருந்து ஒரு அதிநவீன நகர்ப்புற நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்டுள்ளது. இது கிமு 6-ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தையதாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. இங்குள்ள ஏரி, கடந்த கால பருவமழை மாறுபாடுகள் தொடர்பாகப் புரிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் (DST) தன்னாட்சி நிறுவனமான லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி தொல்பழங்கால அறிவியல் நிறுவனத்தின் (BSIP) ஆராய்ச்சியாளர்கள், ஒரு மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் ஒரு வண்டல் பகுதியைத் தோண்டி, 32 நெருக்கமான இடைவெளி மாதிரிகளைச் சேகரித்தனர். ரேடியோகார்பன் டேட்டிங் உள்ளிட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, கடந்த கால மழைப்பொழிவு, தாவரங்கள், ஏரி அளவுகள், வெள்ள நிகழ்வுகளை அதிக துல்லியத்துடன் கண்டறிந்தனர்.
இந்த ஆராய்ச்சி தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கிறது. கீழடிக்கு அருகில் அமைந்துள்ள கொந்தகை ஏரியின் சுற்றுச்சூழல் வரலாறானது, பருவநிலை மாறுபாடு, நீர் பற்றாக்குறை போன்றவற்றுக்கு ஏற்ப பழங்கால சமூகங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொண்டன என்பது குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இது பிராந்திய பாரம்பரிய திட்டமிடலை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214920®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215050)
आगंतुक पटल : 14