நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசு சுகாதார திட்டப் பயனாளிகளுக்காக பரிபூர்ண மருத்துவக் காப்பீடு ஆயுஷ் பீமா திட்டம் அறிமுகம்

प्रविष्टि तिथि: 14 JAN 2026 7:26PM by PIB Chennai

மத்திய அரசு சுகாதார திட்டப் பயனாளிகளுக்காக நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை,  இன்று பரிபூர்ண மருத்துவக் காப்பீடு ஆயுஷ் பீமா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரொக்கமில்லா வசதிகள்நவீன சிகிச்சைகள் மற்றும் பரந்த அளவிலான மருத்துவமனைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

இந்தக் காப்பீடு மத்திய அரசு சுகாதார திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. ஒரு பாலிசியில் அதிகபட்சமாக ஆறு உறுப்பினர்கள் பயனடையலாம். இது ₹10 லட்சம் அல்லது ₹20 லட்சம் காப்பீட்டுத் தொகை தேர்வுகளுடன் இந்தியாவிற்குள் இழப்பீடு அடிப்படையில் உள்நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் காப்பீட்டை வழங்குகிறது. காப்பீட்டு நிறுவனம் மற்றும் சந்தாதாரர்களிடையே 70:30 அல்லது 50:50 கூட்டுப் பகிர்வுக்கு இடையில் பயனாளிகள் தேர்வு செய்யலாம். 

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அனைத்து மத்திய அரசு சுகாதார திட்டப் பயனாளிகளுக்கும் சில்லறை விற்பனைத் தயாரிப்பாகக் கிடைக்கும்இதற்கு சரக்கு மற்றும் சேவை வரி கிடையாது. தற்போதுள்ள சலுகைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட பாலிசிஇந்தியா முழுவதும் அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகலுடன் தடையற்ற அனுபவத்தை வழங்கும். இதனால் அனைத்து மத்திய அரசு சுகாதார திட்டப் பயனாளிகளுக்கும் எளிதாகவும் நம்பிக்கையுடனும் கூடுதல் நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214690&reg=3&lang=1  

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2214742) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati