நித்தி ஆயோக்
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2024- ஐ நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது
பெரிய மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது
प्रविष्टि तिथि:
14 JAN 2026 2:59PM by PIB Chennai
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs)-களின் ஏற்றுமதி தயார்நிலை குறித்த விரிவான மதிப்பீட்டான ஏற்றுமதி தயார்நிலை குறியீடு (EPI) 2024 ஐ NITI ஆயோக் வெளியிட்டது. இந்த குறியீடு, நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளின் பன்முகத்தன்மையையும், இந்தியாவின் உலகளாவிய வர்த்தக லட்சியங்களை அடைவதில் அவற்றின் முக்கிய பங்கையும் அங்கீகரிக்கிறது. EPI இன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2020 இல் வெளியிடப்பட்டது, இது 4- ஆவது பதிப்பாகும்.
2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் 2030-ல் வணிகப்பொருட்கள் ஏற்றுமதியில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகிய இலக்குகளை அடைதல் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து ஏற்றுமதி தயார்நிலை குறியீடு, தேசிய அளவில் ஏற்றுமதி சூழலின் உள்ளார்ந்த தன்மை, மீள்தன்மை, வலிமை ஆகியவை குறித்த மதிப்பீட்டுக் கட்டமைப்பை வழங்குகிறது.
இதனை வெளியிட்டு பேசிய நித்தி ஆயோக்-ன் தலைமைச் செயல் அதிகாரி, இந்தியாவின் ஏற்றுமதி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் தயார் நிலையின் மூலமாகவே தீர்மானிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
ஏற்றுமதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், போட்டித்தன்மையை மேம்படுத்துதல், வலுவான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் மற்றும் வெளிப்படையான கொள்கைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2024-ல் பெரிய மாநிலங்களின் வரிசையில் தேசிய அளவில் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214514®=3&lang=1
***
TV/PD/SE
(रिलीज़ आईडी: 2214713)
आगंतुक पटल : 9