தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லியில் நடைபெறவுள்ள, ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியதாரர் உதவி முகாமின் கால அட்டவணைகளை தகவல் தொடர்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
14 JAN 2026 10:24AM by PIB Chennai
தொலைத்தொடர்புத் துறையின் முதன்மை தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர், ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, தில்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள எம்டிஎன்எல் / பிஎஸ்என்எல் வளாகங்களில் 2026 ஜனவரி மாதத்தில் தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைச் சான்றிதழ் முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஓய்வூதியதாரர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு, வாழ்வு சான்றிதழை நேரில் சரிபார்க்க உரிய ஆவணங்களுடன் தங்கள் வசதிக்கேற்ப பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
16.01.2026 - எம்டிஎன்எல் எக்ஸ்சேஞ்ச் கட்டடம், சி-10 யமுனா விஹார், தில்லி
19.01.2026 - எம்டிஎன்எல் எக்ஸ்சேஞ்ச் கட்டடம், லட்சுமி நகர், தில்லி.
20.01.2026 - எம்டிஎன்எல் எக்ஸ்சேஞ்ச் கட்டடம், நரேலா, தில்லி
22.01.2026 - எம்டிஎன்எல் எக்ஸ்சேஞ்ச் கட்டடம் துவாரகா செக்டார்-6, தில்லி
27.01.2026 - எம்டிஎன்எல் எக்ஸ்சேஞ்ச் கட்டடம் நேரு பிளேஸ், புது தில்லி
உதவி முகாம்களின் நேரம்: காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214383®=3&lang=1
****
AD/SMB/SH
(रिलीज़ आईडी: 2214463)
आगंतुक पटल : 8