மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமையில், புது தில்லியில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 3-வது நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 13 JAN 2026 6:07PM by PIB Chennai

புதுதில்லியில்  இன்று நடைபெற்ற இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (IISER) 3-வது நிலைக்குழு கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

7 நிறுவனங்களின் (ஐஐஎஸ்இஆர்) கல்வி மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் அவற்றின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். நமது திறமையான இளைஞர்களின் முழு திறனையும் வெளிக்கொணரவும், வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் விளைவுகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும் மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளை அவர் பரிந்துரைத்தார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பான செயல்பாட்டை அடைதல், மாணவர்களின் அனுபவத்தை வளப்படுத்துதல் மற்றும் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதற்கான முக்கிய நோக்கத்தை மேம்படுத்துவதற்கு தேவையான எதிர்காலத் திட்டம் குறித்தும் நிலைக்குழு ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவின் உயர்கல்வி என்னும் மகுடத்தில் ஐஐஎஸ்இஆர் நிறுவனங்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களைப் போல இயங்குவதாக  திரு பிரதான் குறிப்பிட்டார். ஒவ்வொரு நிறுவனமும்  கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை நிறுவும் என்றும், தேசிய மற்றும் உலகளாவிய அறிவியல் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் புதிய தலைமுறை விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்கும் என்றும், உலக அரங்கில் இந்தியாவின் அறிவுத் திறனை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214221&reg=3&lang=1

(Release ID: 2214221)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2214321) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी