மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு ஆரோக்கியமான இளைஞர்கள் அவசியம் – மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

प्रविष्टि तिथि: 13 JAN 2026 4:36PM by PIB Chennai

தில்லி பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் இல்லா வளாகம் இயக்கத்தை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளைஞர்களை போதைப்பொருள் உபயோகத்திலிருந்து விடுபடச் செய்யவும் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கவும் நீடித்த மற்றும் கூட்டுமுயற்சிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். போதைப்பொருள் இல்லாத வளாக இயக்கத்தின் கீழ், இ-உறுதிமொழி தளம் (https://pledge.du.ac.in/home) மற்றும் மொபைல் செயலியையும் குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்து போதைப்பொருள் இல்லாத வளாக உறுதி மொழி எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த முன்முயற்சி வெறும் இயக்கமாக மட்டுமின்றி இளைஞர்கள், சமூகம்  மற்றும் நாட்டிற்கான கூட்டுத் தீர்வு என்று குறிப்பிட்டார்.

தில்லி பல்கலைக்கழகம் கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல் சிந்தனை மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்கான சக்தி வாய்ந்த ஆயுதமாகத் திகழ்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த இயக்கம் மூலம் இளைஞர்களை மையமாகக் கொண்ட சவாலுக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த நடவடிக்கையை பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளதாகக் அவர் கூறினார்.

போதைப் பொருள் உபயோகம் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது  மட்மின்றி ஆரோக்கியமான திறன்மிக்க இளைஞர்களையும் குடிமக்களையும் உருவாக்குவதற்கு தடையாக உள்ளதென்றும் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214161&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2214231) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia