நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகர்தலா சோதனைச் சாவடியில் எல்லை வர்த்தகத்தில் புதிய மைல்கல்

प्रविष्टि तिथि: 12 JAN 2026 5:01PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின்  சிறப்புச் செயலாளர் திரு. சுர்ஜித் புஜபால், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், இந்திய சுங்க மின்னணு நுழைவாயில் மற்றும் நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பின்  இணைப்பை இன்று தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் எல்லை தாண்டிய வர்த்தக வசதிகளை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கும் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் மூலம், இந்திய சுங்க மின்னணு நுழைவாயில் மற்றும் நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பிற்கு இடையே நிகழ்நேர இருவழித் தரவுப் பரிமாற்றம் நடைபெறும். கடல் மற்றும் விமான நிலையங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உயர்தரச் செயல்திறனை இது நிலத் துறைமுகங்களிலும் உறுதி செய்கிறது. இதன் மூலம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பணிகளுக்கான அனுமதி விரைவாகக் கிடைப்பதுடன், தானியங்கி செயல்பாடுகள் மூலம் சரக்குகளைக் கையாள்வதில் உள்ள காலதாமதம் குறையும்.

குறிப்பாக, நுழைவுச் சீட்டு, ஏற்றுமதிச் சீட்டு  மற்றும் சரக்கு நகர்வுகள் குறித்த அனைத்துத் தகவல்களும் மின்னணு முறையில் துல்லியமாகப் பதிவு செய்யப்படும். இது மனிதத் தலையீட்டைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதுடன், வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் அரசின் நோக்கத்திற்குப் பெரும் பலம் சேர்க்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213816&reg=3&lang=1

வெளியிட்டு எண்: 2213816

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2213983) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi