கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாராதீப் துறைமுகத்தில் நடைபெற்ற 25 - வது அகில இந்திய பெரு துறைமுகங்களின் கலாச்சார நிகழ்ச்சி கோலாகல நிறைவு

प्रविष्टि तिथि: 12 JAN 2026 1:49PM by PIB Chennai

பாராதீப் துறைமுகத்தில் உள்ள ஜெயதேவ் சதனில், 25 - வது அகில இந்திய பெரு துறைமுகங்களின் கலாச்சார நிகழ்ச்சி 202526, நடைபெற்றது. மக்களை வெகுவாக ஈர்க்கக்கூடிய வகையில் நான்கு நாட்கள் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள், ஜனவரி 11 - ம் தேதி மாலை கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை பாராதீப் துறைமுக ஆணையம், பெரு துறைமுகங்கள் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், பாராதீப் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு பி எல் ஹரநாத் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த கலாச்சார நிகழ்ச்சி, துறைமுக நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதற்கும், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பெண் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தக் கலாச்சார நிகழ்ச்சியில், நாட்டின் 9 முக்கிய துறைமுகங்களிலிருந்து 200 கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பல்வேறு கலாச்சாரப் பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணைய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மும்பை துறைமுக ஆணையம் இரண்டாம் இடத்தையும், தீனதயாள் துறைமுக ஆணையம், கொச்சி துறைமுக ஆணையம் ஆகியவை கூட்டாக மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பாராதீப் துறைமுக ஆணையத்தின் கலைஞர்களும் பாராட்டத்தக்க வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். திருமதி. ஸ்வர்ணலதா திரிபாதி நடித்த மாலதி கதாபாத்திரத்திற்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. மேலும், பிகரம் பரிதா இயக்கிய நாடகம் (மனு), ஹர்ஷிதா மொஹபத்ரா வழங்கிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியிலும் பாராதீப் துறைமுக ஆணையத்தின் அணிகள் பாராட்டுதல்களைப் பெற்றன.

***

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2213699&reg=3&lang=1

(Release ID:2213699)

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2213841) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी