அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த “அப்யுதய்-3” இந்தி மொழிக் கருத்தரங்கம்

प्रविष्टि तिथि: 12 JAN 2026 10:58AM by PIB Chennai

தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்களைச் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடையே கொண்டு செல்லவும், சிஎஸ்ஐஆர் - அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜோத்பூர், ஆகியவற்றுடன் இணைந்து மூன்றாவது தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த அப்யுதய்-3” இந்தி மொழிக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், அறிவியல், தொழில்நுட்பத் துறையில், அண்மைக்கால கண்டுபிடிப்புகள், அடைந்து வரும் முன்னேற்றங்கள், சமூகத்துடனான அவற்றின் தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்தக் கருத்தரங்கில், ஆய்வாளர்கள் 25 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவை மருத்துவத் தாவரங்களின் பல்லுயிர் மதிப்புகள், உயிரியல் கழிவு மேலாண்மை, மனித-செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், சமூக மேம்பாட்டிற்கான புதீய கண்டுபிடிப்புகள், ஆட்சிமொழி, தொழில்நுட்பத்தின் சங்கமம் ஆகிய அம்சங்களை  மையமாகக் கொண்டிருந்தன.

தில்லியைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்  அமைப்பின் ஒரு அங்கமான அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், அறிவியல் தொடர்பு, சான்றுகள் அடிப்படையிலான கொள்கை ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்தி மொழி மூலம் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கும், சமூகத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், இந்தக் கருத்தரங்கு முக்கியப் பங்கு வகித்தது. இந்திய மொழிகள் மூலம் அறிவியல் அறிவை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் இந்த நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இது அறிவியலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மக்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு அறிவியல் அறிவை நன்கு புரிந்துகொண்டு பயன்படுத்த உதவுகிறது.

இந்த நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர்  அமைப்பின் அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும், மக்கள் அறிவியல் பிரிவுத் தலைவருமான திரு சி. பி. சிங், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளைச் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கொண்டு செல்வதில், தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்தி மொழி, திறன்மிக்க அறிவியல் தொடர்பின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். 1952 - ம் ஆண்டு முதல் விஞ்ஞான் பிரகதிஎன்ற பிரபல அறிவியல் இதழை வெளியிடுவது உட்பட, இந்தி மொழியில்  அறிவியல் அறிவைப் பரப்புவதில் இந்நிறுவனம் மேற்கொண்டுவரும் தொடர் முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய, ஐஐடி இந்தூர் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சுஹாஸ் ஜோஷி, தொழில்நுட்பக் கல்வியில் இந்தி மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். இதில் இந்தி மொழியில் அறிவியல் குறித்த விவாதங்கள், பரிந்துரைக்கப்பட்ட ஆட்சிமொழித் தர நிலைகளின் படி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பைத் தயாரித்தல், கருத்தியல் சார்ந்த புரிதல்களை மேம்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்நிலை விரிவுரைகளை இந்தி மொழியில்  வழங்குதல் ஆகியவை அடங்கும் என்று கூறினார். பின்னர் பேசிய ஐஐடி ஜோத்பூரின் இயக்குநர் பேராசிரியர் அவினாஷ் குமார் அகர்வால், இந்தக் கருத்தரங்கம் இந்தி மொழியின் அர்த்தமுள்ள தொழில்நுட்பக் கலந்துரையாடல் தொடங்கியுள்ளது என்றும், தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சியில் அதன் பயன்பாட்டை வலுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவல் மொழி அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

***

(Release ID:2213558)

 

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2213703) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी