தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் ₹111 கோடி செலவில் தேசிய அஞ்சல் பயிற்சி மையம் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா
प्रविष्टि तिथि:
11 JAN 2026 7:09PM by PIB Chennai
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, 2026 ஜனவரி 8 முதல் 11 வரை மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 6 தபால் நிலையங்களைத் திறந்து வைத்தார். மேலும், அஞ்சல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு, குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய பொது சேவை வழங்கல் ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான அக்கறையைப் பிரதிபலிக்கும் பல முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டம், காத்தமிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற திரு ஜோதிராதித்ய சிந்தியா, கோலாரஸ், ஜகத்புரா, பதர்வாஸ், பிச்சோர், கத்தம் ஆகிய இடங்களில் துணை தபால் நிலையங்களையும் , நகர தபால் அலுவலகத்தையும் திறந்து வைத்தார் . மேம்படுத்தப்பட்ட இந்த தபால் நிலையங்கள் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை வசதிகளைக் கொண்டுள்ளன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு நவீனமயமாக்கப்பட்ட அஞ்சல் வசதிகளின் தொடக்க விழா மட்டுமல்ல என்றும், ஒரு அறிவிப்பையும் வெளியிடும் நிகழ்வு என்றும் கூறினார். அஞ்சல் துறை தற்போது சஹரன்பூர், வதோதரா, மைசூரு, குவஹாத்தி, மதுரை, தர்பங்கா ஆகிய ஆறு நகரங்களில் அஞ்சல் பயிற்சி மையங்களை இயக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். இவற்றில் ஆண்டுதோறும் சுமார் 2,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதுவரை கிட்டத்தட்ட 18,000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிவபுரியில் ₹111 கோடி மதிப்பீட்டில் ஏழாவது தேசிய அஞ்சல் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். முன்மொழியப்பட்டுள்ள இந்த மையம் அஞ்சல் பயிற்சி சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்றும், சஹரன்பூர், வதோதரா, மைசூரு, குவஹாத்தி, மதுரை, தர்பங்கா ஆகிய நகரங்களுடன் சிவபுரியும் முதன்மையான அஞ்சல் பயிற்சி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறும் என்றும் திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213461®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2213491)
आगंतुक पटल : 13