மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம், 2047, வளர்ச்சியடைந்த இந்தியாவின் பார்வையுடன் இணைந்துள்ளது மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JAN 2026 7:33PM by PIB Chennai

மத்திய கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், புதுதில்லியில் செய்தியாளர்களிடம் உரையாடினார்.  கிராமப்புற இந்தியாவின் மாற்றத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க சட்டம், 2025 ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று அப்போது அவர் கூறினார்.

இந்தச் சட்டத்தின் கட்டமைப்பு, நீண்டகாலமாக நிலவும் இயல் மற்றும் அடிப்படை வசதிகளின் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் கிராமப்புற கல்வி உள்கட்டமைப்பை நேரடியாக வலுப்படுத்தக்கூடிய பல்வேறு பணிகளை செயல்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள்  ஆகியவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் பாதுகாப்பான குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் சூழல்களை உருவாக்க உதவும், என்று அமைச்சர் கூறினார்.

இதேபோல், அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும், கண்ணியம், சுகாதாரம் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதால்,  குழந்தைப் பருவ கல்வியின் அடித்தளத்தை அவை வலுப்படுத்தும், என்று அவர் குறிப்பிட்டார். கிராமப்புற நூலகக் கட்டிடங்கள் மற்றும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குவது, முறையான பள்ளிப்படிப்பைத் தாண்டி கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், கிராமத்திற்குள் அறிவுசார் வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த கற்பவர்கள் பயனடைகிறார்கள் என்றும் டாக்டர் மஜும்தார் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213312&reg=3&lang=2

***

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2213376) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Telugu