சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் & சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் முக்கிய சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சிகளை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 6:56PM by PIB Chennai

டெல்லியை பாதிக்கும் முக்கிய சாலை உள்கட்டமைப்பு பணிகள், நெரிசல் குறைப்பு உத்திகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான கூட்டத்திற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு  ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமை தாங்கினார். மேற்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினர், டெல்லி தலைமைச் செயலாளர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி கமல்ஜீத் செஹ்ராவத் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், டெல்லி மேம்பாட்டு ஆணையம், டெல்லி காவல்துறை, டெல்லி நீர் வாரியம், டெல்லி போக்குவரத்துத் துறை மற்றும் பிற நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, நாட்டின் தலைநகரான டெல்லி, நவீன, பாதுகாப்பான, தடையற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து அமைப்புகள் மூலம் "வளர்ச்சியடைந்த பாரதத்தின்" உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்லியை நெரிசல் இல்லாத, சிறந்த இணைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு மாதிரி நகரமாக மாற்றுவது, அதே நேரத்தில் குடிமக்கள் மற்றும் பயணிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவை  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று திரு மல்ஹோத்ரா குறிப்பிட்டார்.

ஒப்புதல்களுக்குக் காலக்கெடு அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அனைத்து நிறுவனங்களும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கும், விரைவான முடிவுகளுக்காகத் தீர்க்கப்படாத விஷயங்களைத் தீர்ப்பதற்கும் ஒப்புக்கொண்டன. இதனால் மேம்பாட்டுப் பணிகள் தாமதமாகாமல் இருப்பதையும், மக்களின் வரிப் பணம் திறமையாகப் பயன்படுத்தப்படுவதும் உறுதிசெய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213294&reg=3&lang=2

***

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2213374) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी