மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் திறன் மேம்பாட்டிற்கு மீன்வளத் துறையின் உத்வேக முயற்சி

प्रविष्टि तिथि: 10 JAN 2026 1:51PM by PIB Chennai

மீன்வள மதிப்புத் தொடரை நவீனமாக்குதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் மற்றும் மனித வளம் மற்றும் நிறுவனத் திறனை மேம்படுத்துவதன் மூலம் சந்தைப்படுத்தல் இணைப்புகளை நிறுவுதல் ஆகியவற்றிற்கு திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பை முக்கியமானதாக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்  வலியுறுத்துகிறது.

குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பயிற்சி வகுப்புகள், கற்றல் பயணம், பயிலரங்குகள், மாநாடுகள், பயிற்சியாளர்களுக்கான பயிற்சி  போன்றவை பயிற்சித் திட்டங்களில் அடங்கும். இவை பங்கேற்பாளர்களுக்கு அந்தந்தத் தொழில் செயல்பாடுகள் மற்றும் செயல்திறன் தேவைகளுக்கு ஏற்ப தேவையான அறிவையும் திறன்களையும் வழங்குகின்றன.

இதற்காக, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மீன்வளர்ப்பு விவசாயிகள் வளக் கூட்டுறவு திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு அமலாக்க நிறுவனமான ஐதராபாதில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசின் மீன்வளத் துறை ரூ. 2.93 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு விவசாயிகளின்  பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் மீன்வளத் துறை ஏற்கிறது.

கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 499 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு மொத்தம் 22,921 பங்கேற்பாளர்கள் பயனடைந்தனர். பங்கேற்பாளர்களை நவீன நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் தயார்செய்வதன் மூலம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் தொடர்ந்து மீன் வளர்ப்பு விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் மீன்வளத்துடன் தொடர்புடைய சமூகங்களை மேம்படுத்தி, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து நல்வாழ்வு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.

மீன்வளத் துறை தலைமையிலான இந்த முயற்சி, பங்குதாரர்களுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமின்றி , மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் மீள்தன்மைக்கும் வலுவான அடித்தளத்தை  அமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213183&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2213225) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi