வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரஸ்ஸல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையருடனான உயர்நிலை உரையாடலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்
प्रविष्टि तिथि:
10 JAN 2026 1:23PM by PIB Chennai
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுத்ததுடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் இரண்டு நாள் (8-9 ஜனவரி 2026) பிரஸ்ஸல்ஸ் பயணம் நிறைவடைந்தது வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையர் திரு. மரோஸ் செஃப்கோவிச்சுடன் தொடர்ச்சியான உயர்நிலை உரையாடல்களில், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும் ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும் பேச்சுவார்த்தை குழுக்களுக்கு இரு தலைவர்களும் வழிகாட்டுதல் வழங்கினர்.
இந்தப் பயணம், இரு தரப்பினரும் ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அரசியல் உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டியது. அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, வர்த்தக செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக இயக்குநர் ஜெனரல் திருமதி சபின் வெயாண்ட் ஆகியோருக்கு இடையே 2026 , ஜனவரி 6-7 தேதிகளில் உயர்நிலை விவாதங்கள் நடைபெற்றன. "வேறுபாடுகளைக் குறைத்து" நிலுவையில் உள்ள பிரச்சனைகளில் தெளிவை உறுதிசெய்து, அமைச்சர்கள் நிலை உரையாடலுக்கான பாதையை அவர்கள் தெளிவுபடுத்தினர்.
தங்கள் பேச்சுவார்த்தையின் போது, மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலும் ஆணையர் திரு செஃப்கோவிச்சும் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியப் பகுதிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். பொருட்களுக்கான சந்தை அணுகல், உற்பத்தி செய்யும் நாட்டின் விதிகள், சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பேச்சுவார்த்தைத் தடங்களில் அடையப்பட்ட நீடித்த முன்னேற்றத்தை இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையின் மூலம் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வலுவான அரசியல் உறுதியை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
(Release ID: 2213179)
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2213220)
आगंतुक पटल : 12