உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகத்தின் சாதனைகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்த ஆண்டிறுதி மதிப்பாய்வு

प्रविष्टि तिथि: 09 JAN 2026 1:04PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதிலும் வேளாண் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், வேளாண் விளைபொருட்களை பாதுகாப்பது, பதப்படுத்துவது ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதல் வேளாண் சார்ந்த தொழில்களில் முதலீடுகளை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புக்களைக் குறைத்தல் போன்ற அம்சங்களில் உணவுப் பதப்படுத்துதல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

உணவுப் பதப்படுத்துதல் துறையின்  வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், பல்வேறு முன்முயற்சிகள் மத்திய உணவுப் பதப்படுத்துதல்  அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 20.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2014-15-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் கூடுதலாகும்.

2023-24-ம் ஆண்டின் வருடாந்தர தொழில்துறை ஆய்வறிக்கையின்படி சீரமைக்கப்பட்ட துறைகளில் 12.83 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் உணவுப் பதப்படுத்துதல் துறை மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது.

பிரதமரின் சிறிய அளவிலான உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை ஒழுங்கமைக்கும் திட்டத்தின் கீழ், 56,462 கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இத்துறையின் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் 4,064 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் கடந்த 2025-ம் ஆண்டில் 36 பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 94 பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக 28.48 லட்சம் மெட்ரிக் டன்  அளவிலான பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத் திறன் மேம்படுத்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212769&reg=3&lang=1   

----

TV/SV/KPG/PD


(रिलीज़ आईडी: 2212964) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati