சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாங்குரோவ் காடு வளர்ப்பு குறித்த தேசியப் பயிலரங்கை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 09 JAN 2026 12:40PM by PIB Chennai

கடலோர வாழ்விடங்கள் மற்றும் நிலையான வருவாய்க்கான முன்முயற்சியாக மிஸ்டி எனப்படும் மாங்குரோவ் காடு வளர்ப்புத் திட்டம்  குறித்த தேசியப் பயிலரங்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த இரண்டு நாள் பயிலரங்கை ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ், மாங்குரோவ் காடுகளை பாதுகாப்பது குறித்த பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார். இத்தகைய முன்முயற்சிகளுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்க கொள்வதாகக் கூறினார். இந்தப் பயிலரங்கில் வனத்துறை அதிகாரிகள், துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து நீடித்த மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது மற்றும் மறுசீரமைப்புக் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212760&reg=3&lang=1

------

TV/SV/KPG/PD


(रिलीज़ आईडी: 2212962) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Telugu