தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஹரியானாவில் சோனிபட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது
प्रविष्टि तिथि:
09 JAN 2026 11:56AM by PIB Chennai
ஹரியானாவில் சோனிபட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரம் குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்கு முறை ஆணையம் ட்ராய் மதிப்பீடு செய்து அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் மொபைல் சேவைகள் (குரல் மற்றும் தரவு) தரத்தை மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்.
மொபைல் அழைப்புகள் தரவுகளைப் பதிவிறக்கம் செய்வது மற்றும் விரிவான பதிவேற்றம் போன்ற பல்வேறு அம்சங்களில் அவை மதிப்பீடு செய்யப்பட்டன. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன மொபைல் சாதனங்கள் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள் நுகர்வோர் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய இணையதளத்திலும் அப்பகுதியில் உள்ள முன்னணி செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுகின்றன.
இந்த மதிப்பீடு குறித்த விரிவான அறிக்கையைப் பெற www.trai.gov.in. என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212748®=3&lang=1
----
TV/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2212805)
आगंतुक पटल : 13