வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இண்டஸ்ஃபுட் 2026: வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கான 'பாரதி' சவால் போட்டி - துபாய் மற்றும் ஜெர்மனி செல்லப் போகும் வெற்றியாளர்கள்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 7:27PM by PIB Chennai
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் , மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் 'இண்டஸ்ஃபுட் 2026' (IndusFood 2026) நிகழ்வில் பங்கேற்றது.
இதில் வேளாண் ஏற்றுமதித் துறையில் புதுமைகளைப் புகுத்தும் நோக்கில் 'பாரதி புத்தொழில் சவால்' (BHARATI Startup Challenge) என்ற போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பன்னாட்டு அங்கீகாரம் வழங்கும் வகையில், துபாயில் நடைபெறும் 'கல்ஃபுட்' (Gulfood) மற்றும் ஜெர்மனியில் நடைபெறும் 'பயோஃபேக்' (BIOFACH) ஆகிய உலகளாவிய கண்காட்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களைக் கொண்ட 'பாரதி புத்தொழில் மண்டலம்' அமைக்கப்பட்டது. இதில் வேளாண் தொழில்நுட்பம், பதப்படுத்துதல், நவீன பேக்கேஜிங் மற்றும் சரக்குப் போக்குவரத்து போன்ற பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் ஸ்டார்ட்அப்கள் தங்களின் புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின. இதன் மூலம் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வளர்ச்சியில் ஸ்டார்ட்அப்களின் பங்கை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அரங்கம் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ள வேளாண் பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு முறைகளை உலகளாவிய வாங்குபவர்களிடம் கொண்டு சேர்க்கும் தளமாக அமைந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உலகச் சந்தையுடன் இணைப்பதன் மூலம், இந்தியாவை நம்பகமான உலகளாவிய உணவு விநியோகஸ்தராக நிலைநிறுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212598®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212598
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212645)
आगंतुक पटल : 11