தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

குஜராத் காந்தி நகரில் மாசுபட்ட குடிநீரால் ஏற்பட்ட டைஃபாய்ட் பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையம்

प्रविष्टि तिथि: 08 JAN 2026 2:20PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்தி நகரில் மாசுபட்ட குடிநீரை குடித்ததால் டைஃபாய்ட் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொள்கிறது. அந்நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் டைஃபாய்ட் காய்ச்சலால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதிதாக நிறுவப்பட்ட தண்ணீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இந்தப் பாதிப்பு  உண்டானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  குடிநீர் விநியோகத்துடன் கழிவு நீரும் கலந்துள்ள தண்ணீர்க் குழாயில் 7 இடங்களில் கசிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

செய்திகளில் வெளியான தகவல்கள் உண்மை எனில் இதில் மனித உரிமைகளை மீறும் செயல் என்று ஆணையம் கருதுகிறது. இதையடுத்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் மாநில தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212381&reg=3&lang=1  

----

TV/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2212516) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati