வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பு ஒப்பந்தம்: முதலீடுகளை ஈர்க்க லிச்சென்ஸ்டைன் நாட்டிற்கு அமைச்சர் பியூஷ் கோயல் பயணம்

प्रविष्टि तिथि: 07 JAN 2026 7:08PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், 2026-ஆம் ஆண்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக லிச்சென்ஸ்டைன் நாட்டிற்கு இன்று அதிகாரப்பூர்வ வருகை தந்தார். இப்பயணத்தின் போது, அந்த நாட்டின் இளவரசர் அலோயிஸ் மற்றும் பிரதமர் பிரிஜிட் ஹாஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பு (ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து) இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஒப்பந்தத்தை வேகப்படுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கவும், 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக (4.13 டிரில்லியன் டாலர்) உருவெடுத்துள்ள இந்தியாவில் நிலவும் நிலையான வர்த்தகச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். குறிப்பாக 'ஹில்டி' (Hilti AG) போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதியை சந்தித்த அவர், இந்தியாவில் உற்பத்தியைப் பெருக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுடன் இணைந்து செயல்படவும் வலியுறுத்தினார்.

அதேசமயம், பால்பொருட்கள், சோயா, நிலக்கரி மற்றும் உணர்திறன் மிக்க விவசாயப் பொருட்கள் போன்ற இந்தியாவின் முக்கியத் துறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார். இத்தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்தியத் தயாரிப்புகளின் தரத்தை உலக அளவில் உயர்த்தவும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வலுப்படுத்தவும் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212179&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்: 2212179

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2212275) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi