பாதுகாப்பு அமைச்சகம்
மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சீனிவாஸ் குமார் சின்ஹா போன்ற ஆளுமைகளின் பணிகள் அரசுக்கு உத்வேகம் அளிக்கிறது- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
07 JAN 2026 6:09PM by PIB Chennai
இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் நாடு தெளிவான மற்றும் உறுதியான கொள்கைகளுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சீனிவாஸ் குமார் சின்ஹா போன்ற ஆளுமைகள் அரசுக்கு உத்வேகம் அளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் சிறந்த அதிகாரியாகவும் பின்னர் நேபாள நாட்டின் தூதராகவும் அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராகவும் பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் சின்ஹாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு சொற்பொழிவின் போது காணொலிக் காட்சி செய்தி வாயிலாக அவர் இதனைத் தெரிவித்தார். லெப்டினன்ட் ஜெனரல் சின்ஹாவிற்கு மரியாதை செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு, அயராத பற்று ஆகியவற்றுக்கு புகழாரம் சூட்டினார். லெப்டினன்ட் ஜெனரல் சின்ஹா சிறந்த ராணுவ வீரராகவும் தூதராகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212148®=3&lang=1
****
TV/IR/SH
(रिलीज़ आईडी: 2212251)
आगंतुक पटल : 6