தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கத்துறையில் சீரான பாதுகாப்பு தரநிலைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்: மத்திய அமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே

प्रविष्टि तिथि: 07 JAN 2026 2:08PM by PIB Chennai

இந்தியாவின் சுரங்கத்துறை செயல்பாடுகள் நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதில் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமான சேவையை நினைவுகூரும் வகையில் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுரங்கப் பாதுகாப்பு தலைமைய இயக்குநரகத்தின் 125-வது நிறுவன தினம் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே, சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைமை இயக்குநர் திரு உஜ்வல் தா, அமைச்சகத்தின் இணை செயலாளர் திருமதி தீபிகா கஜல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி ஷோபா கரந்தலஜே, சவாலான சூழலில் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அனைத்து சுரங்கப் பணிகளிலும் சீரானப் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிசெய்வதில் சுரங்கப் பாதுகாப்பு தலைமைய இயக்குநரகத்தின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை திறம்பட அமல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.   

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212057&reg=3&lang=1

***

AD/SV/RJ/PD


(रिलीज़ आईडी: 2212115) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada