அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-ன் 80-வது நிறுவன தினத்தை முன்னிட்டு உலகின் இரண்டாவது தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகம் மற்றும் உலகின் ஐந்தாவது சூரிய மின்கல அளவுத்திருத்தத்திற்கான தேசிய முதன்மை தரநிலைப் பிரிவு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 05 JAN 2026 6:07PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்புவி அறிவியல்பிரதமர் அலுவலகம்விண்வெளித் மற்றும் அணுசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று சிஎஸ்ஐஆர்–தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (என்பிஎல்) உலகின் இரண்டாவது "தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகம்" மற்றும் உலகின் ஐந்தாவது "சூரிய மின்கல அளவுத்திருத்தத்திற்கான தேசிய முதன்மை தரநிலைப் பிரிவு" ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-ன் 80-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் உரையாற்றிய அமைச்சர், "தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகம்" இந்தியாவிற்கு சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் அதே வேளையில், "தேசிய முதன்மை தரநிலைப் பிரிவு " சூரிய சக்தி அளவியலில் உலக அளவில் மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் இந்தியாவை நிலை நிறுத்துகிறது என்றார். சிஎஸ்ஐஆர்-ன் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர்இந்த ஆய்வகம் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட புகழ்பெற்ற தேசியத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் சமூக-பொருளாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய இயக்கிகளாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

 தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகம்இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும் என்று விவரித்தார். ஜெர்மனியின் பிடிபி உடன் இணைந்து உருவாக்கப்பட்ட சூரிய மின்கல அளவுத்திருத்தத்திற்கான தேசிய முதன்மை தரநிலைப் பிரிவை, "எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் அமைப்பு" என்று வர்ணித்ததுஇது ஒளிமின்னழுத்த அளவீட்டு தரநிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய தலைவர்களின் குழுவில் இந்தியாவை நிலை நிறுத்துகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

"இந்தியாவின் ஆற்றலை மேலும் வலுப்படுத்த நாடு இப்போது அதன் அறிவியல் நிறுவனங்களை எதிர்நோக்குகிறது," என்று அவர் கூறினார். 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முன்னேறும் போதுதொழில்நுட்பத் தலைமை மற்றும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் சிஎஸ்ஐஆர்-என்பிஎல் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211574&reg=3&lang=1

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2211647) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी