அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் 42-வது நிறுவன தின கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
ஆழ்ந்த தொழில்நுட்பத் துறையில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்புச் சலுகை வழங்கப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
04 JAN 2026 6:18PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் 42-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்கு ஆழ்ந்த தொழில்நுட்ப (டீப் டெக்) புத்தொழில் நிறுவனங்கள் கட்டாயமாக மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு செய்யப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, புத்தொழில் திட்டங்களை தொடங்குபவர்கள், தொழில்முனைவோருக்கு உத்வேகத்தை வழங்கும் என்று அவர் கூறினார். ₹1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதியம், நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
தற்சார்பு என்ற இலக்கைத் தாண்டி இந்தியா முன்னேறி வருவதாகவும், தற்போது மற்ற நாடுகள் இந்திய திறன்களை அதிக அளவில் சார்ந்து இருக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். தடுப்பூசிகள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை மேற்கோள் காட்டிய அவர், இந்தியா இறக்குமதி சார்பில் இருந்து ஏற்றுமதிக்கு மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211282®=3&lang=1
***
AD/PLM/RK
(रिलीज़ आईडी: 2211322)
आगंतुक पटल : 17