PIB Headquarters
azadi ka amrit mahotsav

நாட்டின் குறைக்கடத்திச் சூழல் அமைப்பை வலுப்படுத்தும் வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்

प्रविष्टि तिथि: 04 JAN 2026 12:18PM by PIB Chennai

இந்தியா தனது குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) லட்சியங்களை விரைவாக முன்னெடுத்து வருகிறது. குறைக்கடத்தி சிப்கள் தகவல் தொடர்பு, பாதுகாப்பு, விண்வெளி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் முக்கிய அம்சங்களாக உள்ளன. டிஜிட்டல்மயமாக்கல் விரைவடைந்துள்ளதால், குறைக்கடத்தி சிப்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கும் விதமாக, மத்திய அரசு, செமிகான் இந்தியா திட்டம், இந்திய குறைக்கடத்தி இயக்கம் ஆகியவற்றைச் செயல்படுத்துகிறது. இதன்மூலம், உள்நாட்டு குறைக்கடத்தி உற்பத்தி வலுப்படும். இருப்பினும், குறைக்கடத்தி உற்பத்தி குறைந்த எண்ணிக்கையிலான பகுதிகளிலேயே உள்ளது. இதனால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் இடையூறுகளுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளன. உலகளாவிய உற்பத்தித் தளத்தை பன்முகப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தியா உலகளாவிய குறைக்கடத்திச் சூழலில் ஒரு நம்பகமான நாடாக வளர்ந்து வருகிறது.

ஒரு வலுவான குறைக்கடத்தித் திறன் கொண்ட சூழல் அமைப்பை உருவாக்குவது, இறக்குமதிகளைக் குறைப்பதற்கும், நீண்டகால தொழில்நுட்பத் தலைமையை நிலைநாட்டுவதற்கும் வழிவகுக்கும்.

வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (டிஎல்ஐ - DLI) திட்டம், வலுவான திறனை வளர்ப்பதற்கான இந்தியாவின் லட்சியத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். இத்திட்டத்தில், உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, நிதி ஊக்கத்தொகைகளுடன் மேம்பட்ட வடிவமைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் வலுவான, தற்சார்பு சிப் வடிவமைப்பு சூழல் ஊக்குவிக்கப்படும். செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த சுற்றுகள் (ICகள்), சிப்செட்கள், சிஸ்டம்ஸ்-ஆன்-சிப் (SoCகள்), அமைப்புகள், ஐபி கோர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வடிவமைப்பு, மேம்பாடு தொடங்கி பயன்பாடு வரை முழு வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் குறைக்கடத்தி வடிவமைப்பை டிஎல்ஐ திட்டம் ஆதரிக்கிறது. மின்னணு தயாரிப்புகளில் உள்நாட்டு குறைக்கடத்தி உள்ளடக்கத்தையும், உள்நாட்டு அறிவுசார் சொத்துக்களையும் ஊக்குவிப்பதன் மூலம், இந்தத் திட்டம் இறக்குமதி சார்புநிலையைக் குறைத்து, விநியோகச் சங்கிலி மீட்சித் தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், உலகளாவிய குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை வலுவாக நிலைநிறுத்துவதற்கு மிகவும் முக்கியமானது. இறக்குமதி செய்யப்பட்ட குறைக்கடத்தி ஐபி-கள், சிப்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும், புவிசார் அரசியல் இடையூறுகளுக்கு எதிராக மீட்சித்தன்மையை வலுப்படுத்துவதன் மூலமும் இது நீண்டகால தற்சார்புப் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.

இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்திய நிறுவனங்கள் நம்பகமான உலகளாவிய விநியோக நிறுவனங்களாக மாறும் என்பதுடன் உள்நாட்டு விநியோகச் சங்கிலியும் வலுப்படும். இதன் மூலம் இந்தியாவின் சுயசார்பு குறைக்கடத்தி சூழல் அமைப்பு வலுப்படும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211220&reg=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150464&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2159727&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202899&reg=3&lang=2

https://chips-dli.gov.in/DLI/FAQ

https://ism.gov.in/about-semiconindia

https://www.meity.gov.in/static/uploads/2024/12/10fcadec462c330211502fed3d24ea83.pdf

https://eparlib.sansad.in/bitstream/123456789/2989604/1/lsd_18_IV_02-04-2025.pdf  

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2211248) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Gujarati