ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டில் நிலவளத் துறையின் செயல்பாடுகள்

प्रविष्टि तिथि: 01 JAN 2026 1:21PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம்  நிலவளத் துறை ஏறத்தாழ மொத்தப் பணியை நிறைவு செய்துள்ளது. நில நிர்வாகத்தை "காகித ஆவணங்களில்" இருந்து "ஆன்லைனுக்கு" திறம்பட மாற்றியுள்ளது. இதனால் 19 மாநிலங்களில் உள்ள குடிமக்கள் இப்போது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட, சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் நிலப் பதிவுகளை வீட்டிலிருந்தே பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 406 மாவட்டங்களில் உள்ள வங்கிகள் அடமானங்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.  இது கடன் அணுகலை கணிசமாக விரைவுபடுத்துகிறது.

நகர்ப்புற வாழ்விடங்களின் தேசிய புவியியல் அறிவு அடிப்படையிலான நில ஆய்வு முன்னோடித் திட்டம் 157 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் சண்டிகரிலும் முன்னோடித் திட்டமாக நில வகைமை மற்றும் வருவாய் விதிமுறைகளின் சொற்களஞ்சிய தொகுப்புப் பணி தொடங்கப்பட்டது. புவிசார் அளவெல்லைகளை அடிப்படையாகக் கொண்ட 14 இலக்கக் குறியீடு, "நிலத்திற்கான ஆதார்" என நிறுவப்பட்டுள்ளது. நீர்நிலை மேம்பாட்டுக் கூறு - பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் 2.0 கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியிலிருந்து மொத்தம் ரூ.5576 கோடி விடுவிக்கப்பட்டது.

நீர்நிலை மேம்பாட்டுக் கூறு - பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் நீர்நிலை மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திட்டப் பகுதிகளில் மக்களின் பங்களிப்பை உருவாக்கவும், பிப்ரவரி 2025 முதல் மே 2025 வரை நீர்நிலை யாத்திரைநடத்தப்பட்டது.

நீர்நிலை முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் முன்னிலையில், "நீர்நிலைப்  பெருவிழா" என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரம் 2025 நவம்பர் 11 அன்று மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சரால் தொடங்கப்பட்டது. நீர்நிலை மக்கள் பங்கேற்பு கோப்பை திட்டத்தின் கீழ் விருது வழங்குதல்அடிக்கல் நாட்டுதல், நாட்டுக்கு அர்ப்பணித்தல், உழைப்புதானம், தோட்டக்கலை இயக்கங்கள் மற்றும் முந்தைய நீர்நிலை சொத்துக்களை பழுதுபார்த்தல்நீர்நிலை புனரமைப்பு தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

உலக வங்கி உதவியுடன் விவசாய மீள்தன்மைக்கு புதிய மேம்பாடு மூலம் நீர்நிலைகள் புனரமைப்பு (ரிவார்ட்) திட்டத்தின் கீழ், உலகளாவிய நிபுணர்கள், தேசிய நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன், பெங்களூருவில் 2025 நவம்பர் 26-28 தேதிகளில் நீர்நிலை மீள்தன்மை: அறிவியல், நிலைத்தன்மை மற்றும் சமூகத்தை ஒருங்கிணைத்தல்என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாடு நடைபெற்றது.

2025-ல் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள், கிராமப்புற இந்தியாவிற்கு நிலையான நீர்நிலை மேலாண்மை, பருவநிலை மீள்தன்மை, சமூக பங்கேற்பு, நீண்டகால நீர் பாதுகாப்பு ஆகியவற்றில்  அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210412&reg=3&lang=1

***

AD/SMB/KR


(रिलीज़ आईडी: 2210510) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese