இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பெங்களூரு சாய் மையத்தில் ரூ.75 கோடி மதிப்பிலான உயர்திறன் மையம்: மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
31 DEC 2025 3:46PM by PIB Chennai
பெங்களூரு இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் ரூ.75 கோடி மதிப்பிலான உயர்திறன் மையத்திற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்திற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து ரூ.60 கோடியை வழங்குகிறது. விளையாட்டு மருத்துவம், உடற்தகுதி, மறுவாழ்வு, பயோமெக்கானிக்ஸ், உளவியல் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஒரே கூரையின் கீழ் இங்கு அமையவுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "இந்த மையம் இந்திய விளையாட்டை பங்கேற்பு நிலையிலிருந்து பதக்கம் வெல்லும் நிலைக்கு மாற்றும். பாதுகாப்புத் துறையில் பங்களிக்கும் ஒரு நிறுவனம், தற்போது விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் கைகொடுத்துள்ளது" எனப் பாராட்டினார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் "சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்" என்ற மந்திரம் இந்தியாவின் விளையாட்டு சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரு மையம் இந்தியாவின் முதன்மையான விளையாட்டு மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த புதிய உயர்திறன் மையம் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் நீண்டகால இலக்கிற்கும், சர்வதேசப் போட்டிகளில் நமது வீரர்கள் சிறந்து விளங்கவும் உறுதுணையாக இருக்கும். இந்நிகழ்வில் சாய் மற்றும் எச்.ஏ.எல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210123®=3&lang=2
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2210327)
आगंतुक पटल : 4