புவி அறிவியல் அமைச்சகம்
தமிழ்நாட்டுடன் தொடர்புடைய அதிகாரிகளின் தலைமையில், புவி அறிவியல் அமைச்சகத்தில் இந்தியின் அமலாக்கம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
31 DEC 2025 5:38PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று புதுதில்லியில் உள்ள பிருத்வி பவனில் நடைபெற்றது.
இந்தி மூலம் அறிவியல் அறிவை பரப்புவது, பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவது மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், தமிழ்நாட்டுடன் தொடர்புடைய அதிகாரிகளின் தலைமையில், அமைச்சகத்தில் இந்தியின் அமலாக்கம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டுடன் தொடர்புடைய அதிகாரிகள் அமைச்சகத்தில் இந்தி தொடர்பான பணிகளை முறையாக முன்னெடுக்கும் சூழல் சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்த வளர்ச்சி "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தி மொழியின் விரிவாக்கம் இயற்கையானதாகவும், தேவை சார்ந்ததாகவும் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். பெருநிறுவன மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தி பேசும் இளைஞர்களுக்கு அதிகளவில் முன்னுரிமை அளித்து வருவதாகவும், இந்தப் போக்கு தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட தெளிவாகப் புலப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார். இது, வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புக்கான மொழியாக இந்தி வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய அளவிலான வினாடி வினா போட்டிகள் மற்றும் சவால் அடிப்படையிலான சமூக தொடர்பு திட்டங்களை ஏற்பாடு செய்ய டிஜிட்டல் தளங்களை திறம்பட பயன்படுத்தலாம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஆழ் கடல் இயக்கத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் மாணவர்களை மையமாகக் கொண்ட போட்டிகள் இளைஞர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210231®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2210326)
आगंतुक पटल : 3