குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் டிசம்பர் 29, 30 தேதிகளில் புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 DEC 2025 5:37PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், 2025 டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 29-ம் தேதி, புதுச்சேரியில் ஒரு பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், மகாகவி பாரதியாரின் சிலையைத் திறந்து வைக்கிறார். மேலும் புதுச்சேரியில் நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வீட்டுவசதித் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார். அதே நாளில், குடியரசுத்துணைத் தலைவர் கேரளாவுக்குச் சென்று திருவனந்தபுரம் விழா 2025-ல் கலந்து கொள்ளவுள்ளார்.

டிசம்பர் 30-ம் தேதி, கேரள மாநிலம் வர்க்கலாவில் நடைபெறும் 93-வது சிவகிரி யாத்திரையில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்கவுள்ளார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

அதே நாளில், (டிசம்பர் 30) தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 4.0-ன் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

***

(Release ID: 2209224)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2209251) வருகையாளர் எண்ணிக்கை : 107
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam