பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் 15-வது ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
27 DEC 2025 4:11PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில், 2025 டிசம்பர் 24 அன்று பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறைச் செயலாளர் திருமிகு ரச்சனா ஷா தலைமையில் 15-வது ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகம், நிதி, அஞ்சல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், சிவில் விமானப் போக்குவரத்து போன்ற அமைச்சகங்களின் கீழ் உள்ள 30 துறைகளைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்களின் 1087 குறைகள் இந்த குறைதீர்ப்பு முகாமில் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 815 குறைகள் தீர்க்கப்பட்டன. இது ஓய்வூதியதாரர்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்குவதில் இந்த முன்முயற்சியின் செயல்திறனை விளக்குவதாக இருந்தது.
24.12.2025 அன்று நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு முகாமில், ஓய்வூதியதாரர்கள் அனுபவித்த பிரச்சனைகளும், ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் அவர்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நியாயமான பாக்கிகளைப் பெற எவ்வாறு உதவியது என்பதையும் குறித்து பகிர்ந்துகொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209096®=3&lang=1
***
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2209130)
आगंतुक पटल : 10