ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டில் இந்திய ரயில்வே சுமார் 43,000 முறை சிறப்பு ரயில்களை இயக்கியது

प्रविष्टि तिथि: 26 DEC 2025 6:58PM by PIB Chennai

முக்கிய மத நிகழ்வுகள் மற்றும் பயணிகள் நெரிசல் மிகுந்த காலங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில் பயணங்களை இயக்குவதன் மூலம் பயணிகளுக்கு சீரானபாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் 2025-ம் ஆண்டில்இந்தியா ரயில்வே 43,000க்கும் அதிகமான சிறப்பு ரயில் பயணங்களை இயக்கியது. 

மகா கும்பமேளாவிற்காக அதன் மிகப்பெரிய சிறப்பு ரயில் நடவடிக்கைகளில் ஒன்றை இந்திய ரயில்வே மேற்கொண்டது. 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 28 வரை 17,340 சிறப்பு ரயில் பயணங்களை இயக்கியது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை, 1,144 சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்பட்டனஇது 2024-ன் இதே காலகட்டத்தில் இயக்கப்பட்ட எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான கோடைக்காலத்தில், 12,417 கோடைக்கால சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்பட்டன. இதேபோலசத் பூஜையை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை 12,383 சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்பட்டனஇது முந்தைய ஆண்டை விட கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208936&reg=3&lang=1

***

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2209031) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati