உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விகாஸ் இயக்கத்தை செயல்படுத்த சிறுபான்மையினர் நல அமைச்சகத்துடன் நிஃப்டெம் நிறுவனம் ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 DEC 2025 11:47AM by PIB Chennai

பிரதமரின் விகாஸ் இயக்கத்தை செயல்படுத்த சிறுபான்மையினர் நல அமைச்சகத்துடன் நிஃப்டெம் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குண்ட்லியில் உள்ள  நிஃப்டெம்  எனப்படும் தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் டிசம்பர் 22-ம் தேதி கையெழுத்திட்டது.

இதன் மூலம் சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த 2,110 பேருக்கு உணவுத் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் பயிற்சி அளிக்கும். சிறுதானிய உணவு வகைகள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். ஜார்க்கண்ட், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்  இதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சிறுபான்மையினர் நல அமைச்சகம், தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவற்றின் சான்றிதழகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208737&reg=3&lang=1

------

 

AD/PLM/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2209011) வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Punjabi