அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில்துறை ஈடுபாட்டை மேம்படுத்த தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவது அவசியம்- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 26 DEC 2025 3:14PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று இந்தியாவின் தொழில்துறை ஈடுபாட்டை மேம்படுத்த தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருப்பதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், சென்னை மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களின் அறிவியல் சாதனைகள் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது,  ஒரு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான தொழில்துறை கூட்டாண்மைகளும், ஆய்வக ஆராய்ச்சிகளை சமூக மற்றும் வணிகப் பயன்பாடுகளாக விரைவாக மாற்றுவதும் மிக முக்கியம் என்று அவர் கூறினார்.

நாட்டின் அறிவியல் மற்றும் புத்தாக்கச் சூழல் அமைப்பை வலுப்படுத்த இந்திய அரசு வழங்கும் தொடர்ச்சியான உந்துதலின் பின்னணியில், ஆய்வகங்களின் சமீபத்திய சாதனைகளையும் அவை தேசிய முன்னுரிமைகளுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதையும் மதிப்பிடுவதில் இந்த ஆய்வுக் கூட்டம் கவனம் செலுத்தியது. சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களின் இயக்குநர்கள் தங்களின் முக்கிய சாதனைகளை முன்வைத்து, தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை வலியுறுத்தினர்.

சிஎஸ்ஐஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி; சிஎஸ்ஐஆர்-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்; சிஎஸ்ஐஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை; சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்னை உள்ளிட்ட சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களின் இயக்குநர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களின் முக்கிய சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் முன்வைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208815&reg=3&lang=1              

***

AD/PKV/SE


(रिलीज़ आईडी: 2208984) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी