நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அகர்பத்திக்கான புதிய பிஐஎஸ் தரநிலையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 3:42PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) உருவாக்கிய அகர்பத்திக்கான புதிய தரநிலையை வெளியிட்டார் இந்த தரநிலை தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட தரநிலை, ஆரோக்கியம், திறந்த காற்றுத் தரம் ஆகியவற்றை உறுதி செய்கிறது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சில ரசாயனங்களை அகர்பத்திகளில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது அலெத்ரின் பெர்மெத்ரின் போன்ற சில ரசாயனங்களும் பென்சைல் சைனைடு, எத்தில் அக்ரிலேட் போன்ற செயற்கை திரவியங்களும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அகர்பத்திகளின் மூலப்பொருட்கள், அவை எரியும் தரம் வாசனைத் திறன், வேதியியல் அளவுருக்கள் ஆகியவை குறித்து புதிய தரநிலையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு பாதுகாப்பையும் நிலையான தரத்தையும் உறுதி செய்கிறது உலகின் மிகப்பெரிய அகர்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இத்தொழிலில் ஆண்டுக்கு சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208829®=3&lang=1
***
AD/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208941)
आगंतुक पटल : 18